in

என் அப்பாவை போலீசார் மிரட்டுகின்றனர்: அக்‌ஷய் மார்கண்டேயன் பேட்டி

என் அப்பாவை போலீசார் மிரட்டுகின்றனர்: அக்‌ஷய் மார்கண்டேயன் பேட்டி

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்க்ண்டேயன் மீது 3-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மார்கணேயன் மகன் அக்க்ஷய் மார்கண்டேயன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

தனது அப்பா 5-நிமிடம் பேசியதற்கு கைது செய்யப்பட்டு 13-மணி நேரம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை-யினரால் மிரட்டப்படுகின்றார். அதைபோல் தன்னுடைய அப்பாவை காவல்துறை-யினர் கைது செய்து துப்பாக்கி முனையில் மிரட்டியது என எனது அப்பா சொல்வது உண்மை.

தமிழக முதல்வரே உங்களது மகன்-தான் உங்களிடம் இல்லை ஆனால் நான் என் அப்பாவுடன் இருக்க ஆசைபடுகின்றேன் அதைபோல் எனது அப்பா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து இன்னும் மக்களுக்கு பல சேவைகள் செய்ய நினைக்கின்றார் என விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகன் அக்‌ஷய் மார்கண்டேயன் தெரிவித்தார்.

What do you think?

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு

தென்னை சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு