கமுதியில் தவெக மாவட்ட செயலாளரை அநாகரீகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ வைரல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைக்கப்பட்டது. இதற்கு மின் இணைப்பு வழங்க கோரி தமிழக வெற்றிக் கழகம் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்துள்ளார் .
அது சம்பந்தமாக கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க உரிரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தவெக மாவட்ட செயலாளரை அநாகரீகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும் காவல்துறையினர் முன்னிலையில் மதன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் அநாகரீகமாகவும், ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது .
மேலும் இதுகுறித்து மண்டல மாணிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .


