in

வைகை அணை நீர்த்தேக்கத்தில் மணல் திருட்டு

வைகை அணை நீர்த்தேக்கத்தில் மணல் திருட்டு

 

வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயிகள் அல்லாத நபர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார்.

வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிக்குள் 3 அடி உயரத்திற்கு மணல் சாலை அமைத்து மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக சரிந்தது.

இதனால் வைகை அணையில் தூர்வாரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது இதன் காரணமாக அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள வண்டல் மணல்களை விவசாய பணிகளுக்காக முறையாக ஆவணம் கொடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் வைகை அணையின் நீர் தேக்கப் பகுதியில் விவசாயிகள் அல்லாத நபர்கள் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டு செங்கல் காளவாசலுக்கு விற்பனை செய்வது புகார்கள் எழுந்து வருகின்றன.

வைகை அணை நீர் தேக்கப்பகுதிக்குள் மூன்றடி உயரத்திற்கு மணல் சாலை அமைக்கப்பட்டு அதன் மூலம் டிராக்டர்களில் சென்று மணலை திருடி செல்வதாகவும் இதனால் வைகை அணையில் நீர் தேக்கப் பகுதிகள் தண்ணீர் தேக்க முடியாமல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினர் முறையாக ஆய்வு செய்து வண்டல் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

“போதை ஒழிப்பு” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: எஸ்.ஐ. மைத்துனர் மீது புகார்