in

விநாயகர் பாலதண்டாயுதபாணி சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

விநாயகர் பாலதண்டாயுதபாணி சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

 

ஆரணி அருகே தச்சூர் மலைக்கோவிலில் விநாயகர் பாலதண்டாயுதபாணி சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட குன்றின் மீது அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா முழக்கத்துடன் சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

விழாவையொட்டி அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன.

பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீரை ஏந்தி வந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கலச புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவிந்த பக்தர்கள்

“போதை ஒழிப்பு” விழிப்புணர்வு மாரத்தான் போட்டி