in

குத்தாலம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குடம், காவடி திருவிழா

குத்தாலம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குடம், காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  செட்டியார் கோவில் வடக்கு வீதியில் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் ஆடி மாதம் பால்குடம் காவடி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக காவிரி தீர்த்த படித்துரையிலிருந்து சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேள தாள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பச்சையம்மன் ஆலயம் ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு