in

மங்கைமடம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிய முதியவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு

மங்கைமடம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிய முதியவர் மயங்கி விழுந்து பரிதாப சாவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கீழ வீதியை சேர்ந்தவர் பாலு 60 கொத்தனார் இவர் நேற்று பணியை முடித்துவிட்டு மாலை மங்கைமடம் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க சென்றுள்ளார் கூட்ட நெரிசலில் சரக்கு வாங்கிக் கொண்டு திரும்பியபோது மயங்கி விழுந்துள்ளார் .

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் விரைந்து வந்து இறந்த பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன் விசாரணை மேற்கொண்டனர் .

இந்நிலையில் மங்கைமடம் டாஸ்மாக்கை மூட வேண்டும் இறந்த பாலு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி சரவணன் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இறந்த பாலுவிற்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர் முன்னதாக கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்

பாலக்கரை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் அஷாட நவராத்திரி விழா