in

கமுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கமுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

கமுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திமுக சார்பில் 1049 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வினியோகம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வடக்கு ஒன்றிய கழகம் மற்றும் இளைஞர் அணி கமுதி, அபிராமம், பேரூர் கழகம் சார்பில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்தநாள் விழா தினத்தை முன்னிட்டு 1,049 பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு சேலை, வேஷ்டி, டிபன் பாக்ஸ், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி

கமுதி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் வாசுதேவன் கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன் முத்து ஷாகிர் உசேன் மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலையில் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி ஆகியோ ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணியை அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

What do you think?

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு த.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் 60 கிலோ கேக்..