நாடாளுமன்ற நிலைக்குழுவின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆரோவில் வருகை…
நாடாளுமன்ற நிலைக்குழுவின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச நகருக்கு வந்து ஆய்வு செய்தது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஒரு நாள் பயணமாக விழுப்புரம் மாவட்ட ஆரோவிலுக்கு வந்தனர்.
இந்த சர்வதேச நகரத்தின் ஆன்மீக, உடல் மற்றும் அறிவுசார் பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அவர்களது பயணம் அமைந்தது.இக்குழுவினர் மாத்ரிமந்திர், உள்ளூர் களரிப்பயட்டு மையம் மற்றும் லாஸ்ட் ஸ்கூல் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
நாடாளுமன்றக் குழுவில் முகுல் வாஸ்னிக்,பிரிஜ்மோகன் அகர்வால்,சுமதி,ரவீந்திரன் கான்ஸ்டண்டியன்,
சிகந்தர் குமார்,ஸ்வாதி மாலிவால்ஜிதேந்திர தோஹரேதர்ஷன் சிங் சௌத்ரி
பீம் சிங் உட்பட பலரும் இடம் பெற்றிருந்தது..


