in

இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: வெளியான சிசிடிவி காட்சிகள்

இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: வெளியான சிசிடிவி காட்சிகள்

 

திமுக கவுன்சிலர் மகன் இளைஞர்களை தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்….. ரத்த கரையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…..

திருவண்ணாமலை சந்தை மேடு பகுதியில் வசிப்பவர் 28வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் பழனி. இவரது மகன் கிஷோர். இவர்கள் மணல் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் சந்தைமேடு பகுதிக்கு அருகே உள்ள சமுத்திரம் ஏரியிலிருந்து அவ்வப்போது ஏரி மண் எடுத்து பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உரிய அனுமதியின்றி ஏரியிலிருந்து மண் எடுக்கப்படுகிறதா என்று பலமுறை கேட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் உரிய அனுமதி பெற்று அந்த ஏரியில் மண்ணெடுக்க சென்றாலும் திமுக கவுன்சிலர் தரப்பிலிருந்து இளைஞர்களுக்கு மிரட்டல் வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சந்தைமேடு பெரும்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை திமுக கவுன்சிலர் பழனி என்பவரது மகன் கிஷோர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த திருமால் மற்றும் பிரபு ஆகிய இரண்டு இளைஞர்களை இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் திமுக கவுன்சிலர் பழனி என்பவர் மகன் கிஷோருடன் வந்த பிரவீன், விக்கி, சதீஷ், மோகன் உள்ளிட்ட பல நபர்கள் திருமால் மற்றும் பிரபு ஆகிய இரண்டு இளைஞர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட திருமால் மற்றும் பிரபு இருவரும் ரத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தங்களை கொலை வெறி தாக்குதலுடன் அடித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

குறைந்த மின்னழுத்தத்தால் நள்ளிரவு வரை மக்கள் அவதி!