in

அரசியலமைப்பு சட்ட தினம் மாலை அணிவித்து மரியாதை

அரசியலமைப்பு சட்ட தினம் மாலை அணிவித்து மரியாதை

 

கும்பகோணத்தில் அரசியலமைப்பு சட்ட தினம் – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கும்பகோணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு அரசு போக்குவரத்து கழகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை பொதுச் செயலாளர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரச முதல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி ஆகியவற்றை உறுதி செய்வதே நமது அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம். சாதி, மதம், இனம், பாலினம் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்று சொன்ன ஒரே சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்! ஜனநாயகத்தை காப்போம்! என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், தொழிலாளர் விடுதலை முன்னணி மண்டல பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், மண்டல தலைவர் வீரமணி, மண்டல பொருளாளர் சசிகுமார், துணை பொது செயலாளர் ராமலிங்கம், கருத்தியல் பரப்பு செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

What do you think?

ஒளிரும் எச்சரிக்கைகள் இல்லாததால் விபத்து

விருத்தாசலம் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்? பொதுமக்கள் அதிர்ச்சி!