in

அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

 

வால்பாறை அடுத்துள்ள நல்ல முடி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகளரிடம் நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக 50 ருபாய் வீதம் வசூலிக்கும் வனத்துறையினர். அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டும் சுற்றுலா பயணிகள்.

கோவை மாவட்டம் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டினரும் அண்டை மாநிலமான பெங்களூர், பாண்டிச்சேரி, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

வால்பாறை பகுதியில் சில்லென்ற காற்றும்,சாரல் மழையும், பனிப்பொழிவும், குளிர் காற்றும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர், குறிப்பாக வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வனத்துறை ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலித்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூலிப்பது வேதனையாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

இங்கு கழிப்பிட வசதியும் இல்லை என்றும் கார் பார்க்கிங் வசதியும் இல்லை என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதி செய்து தர சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல்துறையினரின் செயல் நெகிழ்ச்சி

ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல் : இருவர் கைது