OP பதிவுக்கு ஆதார் OTP கட்டாயம்; ஆரணி அரசு மருத்துவமனையில் பரபரப்பு
சட்டமன்ற உறுப்பினர் நானே என் மகனிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறேன். நான் பிளஸ் டூ வரைதான் படித்திருக்கிறேன்.
எனக்கே சிரமமாக இருக்கும் போது, பொதுமக்கள் எப்படி பயன்படுத்துவார்கள்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கு (OP) கட்டாய ஆதார் OTP நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஐந்து நாட்களாக நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 200-க்கும் மேற்பட்டோர் OP பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை ஆரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமி காந்தன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவர்களிடம் பேசிய அவர் எனக்கே OTP நடைமுறை முழுமையாக தெரியாது. நானே என் மகனிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறேன்.
நான் பிளஸ் டூ வரைதான் படித்திருக்கிறேன்.

எனக்கே சிரமமாக இருக்கும் போது பொதுமக்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இனிமேல் நோயாளிகளிடம் ஆதார் அட்டை மற்றும் OTP பெயரில் தேவையற்ற சிரமம் ஏற்படுத்தினால் மருத்துவமனை முன்பு என் தலைமையில் 5,000 பேருடன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் மருத்துவர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.


