in

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட யோகா திருவிழா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட யோகா திருவிழா

 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகமே வியந்து பார்க்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட யோகா திருவிழா வரலாற்றுச் சின்னமான செஞ்சிக்கோட்டையில் நடைபெற்றது

சர்வதேச யோகா தினமான ஜூன் 21 ஆன பாரத பிரதமர் நரேந்திர மோடி உலக யோகா தினத்திற்கான யோகா பயிற்சிகளை முறைப்படி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் யோகா அலை வீசத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற விழுப்புரம் மாவட்டத்தின் பெருமையான செஞ்சிக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.

“ஆரோக்கியமான முதுமைக்கு யோகா” (Yoga for healthy aging) என்ற உன்னதமான கருப்பொருளை முன்வைத்து இந்த ஆண்டு யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இளமையிலேயே யோகாவைத் தொடங்குவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான முதுமையைப் பெற முடியும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு நான்கு முக்கிய இடங்களில் மட்டுமே இத்தகைய மாபெரும் யோகா நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் மிக முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த செஞ்சிக்கோட்டை.

கோட்டையின் உள்ளே இருக்கும் உலகப் புகழ்பெற்ற கல்யாண மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவமாணவிகள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

ஒரே நேர்கோட்டில் அமர்ந்து மன அமைதியுடனும் அசாத்திய உடல் நளினத்துடனும் மாணவர்கள்‌பல்வேறு ஆசனங்களை செய்யும் காட்சிகள் பார்ப்போரைக் கட்டிப்போடும் வகையில் அமைந்தது.

பழைமையும் வீரமும் நிறைந்த செஞ்சிக்கோட்டையின் சுவர்கள் இன்று அமைதி மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமான யோகா மந்திரங்களால் எதிரொலித்தது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியதும். ஐநா சபை அதற்கு ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் பிரம்ம உட்சவம்

பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா