குத்தாலத்தில், இலவச இருதய மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிறப்பு முகாம்
குத்தாலத்தில், இலவச இருதய மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிறப்பு முகாமை மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடுதுறை முருகன் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தங்கையன் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் தங்கையன் நினைவு வசந்தம் அறக்கட்டளை இணைந்து
நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைதம்பி ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆடுதுறை முருகன் கலந்து கொண்டு இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் இருதயம் மற்றும் பொது மருத்துவம், சக்கரை நோய், ECG, ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு,மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுமார் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவரிடம் உடலை பரிசோதனை செய்து கொண்டு பின்னர் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுச் சென்றனர்.


