மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு! விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில் நடைபெற்றதுகூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தமிழக அரசு அறிவித்தபடி முழுமையாக பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் தஞ்சை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணைக்கட்டு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

