தொடர் இரு சக்கர வாகன திருட்டு.. தமிழகத்தின் பிரபல திருடன் கைது
புதுச்சேரி நகரில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு ..தமிழகத்தின் பிரபல திருடன் கைது…வாகனங்கள் பறிமுதல்…
நகரில் அரசு மருத்துவமனை,பேருந்து நிலையம்,வழிபாட்டு தளம் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது..
இதனை தொடர்ந்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்த போது எட்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கடந்த மூன்று நாட்களில் மாதங்களாக அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் சோதனை நடத்தியதில் சென்னையை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன திருடன் ரமணா என்பது தெரியவந்தது.
ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு ஆக்டிங் டிரைவர் ஆக இருந்துள்ளார். சிறுவயதிலேயே குடும்பத்தைப் பிரிந்தவர் வீடு வாசல் ஏதுமின்றி எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு தங்குகிறார்.
கோயில் வாசல்களில் படுத்து உறங்குவது இவரது வழக்கம்.அந்தப் பகுதியில் கிடைக்கும் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு புதுச்சேரிக்கு வந்து மது குடித்துவிட்டு செல்வது வழக்கம்.. அப்படி புதுச்சேரிக்கு மது குடிக்க வந்தவர் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிவதால் தனது கைவரிசை இங்கு காட்டியுள்ளார்.
கடற்கரை சாலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் இருப்பதை நோட்டமிட்டு போலி சாவி போட்டு திருடி சென்றுள்ளார்.
இவற்றை ஐந்தாயிரம், மூவாயிரம் ரூபாய் என தனக்கு தெரிந்தவர்களிடம் விற்று மது குடித்துவிட்டு நாட்களை நகர்த்தி வந்துள்ளார்.. இவரைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிக சிரமம் ஏற்பட்டது… மூன்று மாதங்களாக அவரை தேடி வந்தனர்.
அவர் எந்த ஊரிலும் அறை எடுத்து தங்குவது கிடையாது.. செல்போன் வைத்திருப்பது கிடையாது. கோவில் வாசலில் படுத்து உறங்குவது.. தேவை ஏற்படும்போது உடைகளை துவைப்பதற்காக மட்டும் சிறிய ஓட்டலில் அறை எடுத்து தனது திருட்டுத் தொழிலை நடத்தி வந்துள்ளார்.

கடந்த வாரம் அண்ணா சாலையில் ஒரு வாகனத்தை திருட வந்தபோது அவரை பெரியக்கடை கிரைம் போலீசார் சுற்றிவழித்து பிடித்தனர்..புதுச்சேரியில் திருடிய 8 வாகனங்களையும் விற்றவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் ராமுலு என்பவது மகன் ரமணா என்ற பாபு(வயது 53) என்பதும், தமிழகம்-புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, ஒரு வழிப்பறி நடத்தியிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


