531 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
அரசால் தடை செய்யப்பட்ட 531 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – கடத்தி வந்தவர்கள் கைது.
கடலூர் புது நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசு என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடலூர் புதுநகர் காவலர்கள் கடலூர் செம்மண்டலம் மகளிர் தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா காரை சோதனைக்காக நிறுத்திய போது அவர்கள் நிற்காமல் வேகமாக செல்ல முயன்ற காரை துரத்திப்பிடித்து காரை சோதனை மேற்கொண்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக விற்பனை செய்ய எடுத்துச் சென்றது தெரிய வந்தது, .
இதனெடுத்து புகையிலை பொருட்களை எடுத்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் சௌவுத்ரி, குஜராத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பாபு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புகையிலைப் பொருட்களை கடத்தி வர பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கொண்டுவரப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு 5 லட்சத்து 36, ஆயிரம் மேல் இருக்கும் என்றும், மொத்த எடை சுமார் 530 கிலோ என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


