கூறைநாடு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலய 4 ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம்
கூறைநாடு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் 4 ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் 4 ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்தில் விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம் மூலமந்திர ஹோமம் வளர்க்கப்பட்டு பின்னர் பூர்ணாஹுதி நடைபெற்று தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலய பிரகாரத்தில் வலம் வந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு கட அபிஷேகம், மஹா அபிஷேகம் தீபாராதனை, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதணை
காண்பிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுந்தரமூர்த்தி விநாயகரை வழிபட்டுச் சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


