in

அண்ணாமலையார் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

அண்ணாமலையார் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

 

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது…

ஆனி பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…..

திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில்
அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு
மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.

சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் மிதுன லக்னத்தில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தஷ்ணாயன புண்ணிய கால கொடியேற்ற விழா சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து  முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தங்க கொடிமரம் அருகில் எழுந்தருளி சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிப்பட்டனர்.

What do you think?

குறைந்த வட்டியில் கோல்டு லோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகுவைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆன அடகுகடை உரிமையாளர் 

மர்ம நபர்கள் கைவரிசை: 35 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை