in

மயிலம் முருகன் கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மயிலம் முருகன் கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி

 

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தி பரவசத்தில் பக்தர்கள் மயிலம் முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் மலை மேல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன், பழ வகைகள், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆறாம் நாள் நாள் நிகழ்ச்சியான தங்க கவசத்தில் உற்சவர்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். உடன் வீரபாகு தேவர் வெள்ளிக் கவசத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் பஞ்சமுக தீபாராதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் ஷோடச உபசார பூஜைகள் பல்வேறு வகையான தீபாராதனைகள் மற்றும் பஞ்சமுக தீபம் காண்பிக்கப்பட்டது. ஷோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஸ்ரீ சண்முகர் வள்ளி தெய்வானை சமேதராகவும், வீரபாகு தேவர் ஆகிய சுவாமிகள் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் காட்சி நடைபெற்றது.

தொடர்ந்து,கந்தசஷ்டி விழாவையொட்டி, இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்குதலும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீ சண்முகர் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடத்திக் காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கிரிவலம் நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

What do you think?

தேவூர் அருள்மிகு மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

அழகன் முருகன் திருக்கோவில் கந்தசஷ்டி பெருவிழா