in

அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய ஆனி திருவிழா பூக்குழி நேர்த்தி கடன்

அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய ஆனி திருவிழா பூக்குழி நேர்த்தி கடன்

 

நாமக்கலை அடுத்த கீழப்பேட்டைபாளையம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய ஆனி திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் கீழபேட்டபாளையத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழா மூன்று நாள் நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் நிகழ்வில் நேற்று மாலை உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய பல்லாக்கில் காட்சி தர கோவில் பூசாரி பூ கரகம் வேல் உள்ளிட்டவைகளுக்கு மகா தீபாரனை காண்பித்த பின் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்களுடன் பல்வேறு வீதிகள் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தது.

பின்னர் கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் முதலில் கோவில் பூசாரியும் பின்னர் வேல் பூசாரி பின்னர் பக்தர்கள் இறங்கி தங்கள் நேந்த்தி கடன் செய்தனர் பெண்கள் பூவாரி போடும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

காந்தமலை தேய்பிறை சஷ்டி தங்க கவச அலங்காரம்

120 பந்தய புறாக்கள் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே பறிமுதல்