in

சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கருட வாகனம்

சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கருட வாகனம்

 

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நான்காம் நாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வீதி உலா வந்த பெருமாள் – கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் கோலாட்டம் உள்ளிட்டவைகளை ஆடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த குழந்தைகள்.

மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ முன்னிட்டு இன்று கோவில் யாகசாலையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற அந்த யாகசாலையில் பூரணதியாகி தொடர்ந்து தியாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட மலர்கள் உள்ளிட்டவைகள் உற்ச சீனிவாச பெருமாளுக்கு அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நான்காம் நாள் மாலை வேளையில் கருட வாகனத்தில் வீதி உலாவிற்கு சீனிவாச பெருமாள் புறப்படுவதற்கு முன்னதாக அப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் மற்றும் கண்ணன் பாடல் உள்ளிட்டவைகளுக்கு கோலாட்டம் ஆடி அனைத்து பக்தர்களுடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில் தொடர்ந்து விசேஷ பூஜைகளுக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பாடாகி கோவிலுக்கு வெளியே இருந்த பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் தொடர்ந்து வீதி உலாவிற்கு புறப்பட்டார்.

சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட பெருமாளுடைய கருட வாகனம் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கக்கூடிய காமராஜர் சாலை கீழவெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் விழுது உலாவின் போது பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் வழிநடிகளும் பக்தர்கள் புஷ்பம் மற்றும் பழங்கள் உள்ள தேவைகளை பெருமாளுக்கு படைத்து சேவித்தனர்.

ஆனி மாத பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளை முன்னிட்டு பெருமாள் வீதி உலா அவர் சென்று பக்தர்களுக்கு சேவை சாத்தினார்.

What do you think?

நாயக்கன்பேட்டை அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சை

தைவான் சிறையில் தவிக்கும் இளைஞர்: மீட்க பெற்றோர் மனு