in

ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

 

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள், மாற்றுத்திறனாளிகள் அவதி; குழாய் பதித்து பள்ளத்தை மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

​நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியான இப்பகுதியில், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையாலும் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது.

​இந்நிலையில், தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலையின் குறுக்கே ராட்சத பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், முறையான தடுப்புகளோ, மாற்று ஏற்பாடுகளோ இன்றி வெட்டப்பட்டுள்ள இந்த ஆழமான பள்ளத்தால், ஆட்சியர் வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களுக்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் நாள்தோறும் வரும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்கள் இந்தப் பள்ளத்தில் சிக்கித் திணறுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிலைதடுமாறி கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

​மழைநீர் வடிவதற்காக இந்தப் பள்ளம் வெட்டப்பட்ட போதிலும், தண்ணீர் முழுமையாக வடியாமல் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சுற்றித் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

​எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, திறந்தவெளி பள்ளத்திற்குப் பதிலாக நிலத்தடியில் குழாய் பதித்து மழைநீர் தடையின்றி வடிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சாலையின் குறுக்கே வெட்டப்பட்டுள்ள ராட்சத பள்ளத்தை உடனடியாக மூடி போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

சாதிய வன்மத்தோடு வேலி அமைக்க முயற்சி

ஆதமங்கலத்தில் ஸ்ரீ சப்தகன்னியம்மன், ஸ்ரீ சாட்டைக்காரன் ஆலய மகா கும்பாபிஷேகம்