in

தஞ்சை பூக்கார சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

தஞ்சை பூக்கார சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முருகன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்து வந்தது.

சஷ்டியின் 6ம் நாளான 15ம் தேதியான இன்று இரவு தஞ்சை பூக்கார தெருவில் எழுந்தருளி இருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையாக போற்றப்படும் இக்கோவில் பிரகாரத்தில் ஆடு, மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த உடன் 6 நாள் விரதம் மேற்கொண்டு இருந்தவர்கள் பானகம் பருகி – விரதத்தை முடித்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 17-ம் தேதி குதிரை வாகன வீதி உலாவும், 20-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

What do you think?

ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோயிலில் சூரசம்ஹார திருவிழா

விருத்தாசலம் அருகே எம்.புதூர் கிராமத்தில் மூன்று கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்!