in

திருக்கார்த்திகை தீப திருவிழா 12 திருக்குடைகள் காணிக்கை

திருக்கார்த்திகை தீப திருவிழா 12 திருக்குடைகள் காணிக்கை

 

ஸ்ரீ அருணாச்சலா ஆன்மீக சேவா சங்கம் சார்பில் 22ம் ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கைலாய வாத்தியங்கள் மற்றும் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகர் வேடமணிந்து 12 திருக்குடைகள் அண்ணாமலையார் கோவிலில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரம் ஸ்ரீ அருணாச்சலம் ஆன்மீக சேவா சங்கம் சார்பில் 22வது ஆண்டாக பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் உலா வரும் போது பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் கட்டப்படும் திருக்குடைகள் அண்ணாமலையார் கோவிலில் காணிக்கை வழங்கப்பட்டது.

3 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்பில் 12 திருக்குடைகள் அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் எதிரே வைக்கப்பட்டு கைலாய வாக்கியங்கள் முழுக்க சிவன், பார்வதி, விநாயகர், முருகர் வேடமடைந்து ஆனந்த தாண்டவம் ஆடி நான்கு மாட வீதியில் வலம் வந்து அண்ணாமலையார் கோவிலில் திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

What do you think?

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடியின் மௌனம் அச்சத்தை ஏற்படுத்துகிறது – மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்!

ஓசூர் ஸ்ரீ முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: நான்காம் நாள் ஏகதின இலட்சார்ச்சனை கோலாகலம்!