in

திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல் யாசகம் கேட்க வேண்டும்

திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல் யாசகம் கேட்க வேண்டும்…..

திருநங்கைகள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம்…..

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் வாழ்வாதாரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம், வேலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 42 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக திருநங்கைகள் மத்தியில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவது வாடிக்கையாக இருப்பதால் அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளை கலைவதற்கும், திருநங்கைகளின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ராதிகா நாயக் திருநங்கைகளுக்கு மத்தியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும், இதனால் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டியதால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்த புகாரின் பேரில் எவ்வித முகாந்தரம் இல்லாததால் அந்த புகாரை நிறுவப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக இன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகள் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாகவும், அவ்வாறு யாசகம் கேட்கும் இடங்களில் திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும், அதனை கருத்தில் கொண்டு 42 மாவட்டத்திலிருந்து வந்துள்ள திருநங்கைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்த நிலையில் திருநங்கைகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலத்தின் போது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகை தரும் திருநங்கைகள் யாசகம் கேட்பது என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது விழித்துள்ளதாகவும், குற்ற செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது தாங்களே காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், எந்த ஒரு திருநங்கையும் தவறு செய்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

What do you think?

வலம்புரி விநாயகர் திருக்கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

நெய்வேலியில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம்