in

கார்த்திகை தீபத் திருவிழா அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரம்

கார்த்திகை தீபத் திருவிழா அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரம்

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மண் பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரம்…..

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்கு செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 24ம் தேதி நடைபெற மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த கார்த்திகை தீபத் திருநாளில் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அவ்வாறு ஏற்றப்படும் தீபத்தின் மூலம் அண்ணாமலையார் வீடுகளில் எழுந்தருளி அருள் பாலிப்பார் என்பது மக்களின் ஆன்மீக நம்பிக்கை.

இதனால் பொதுமக்கள் கார்த்திகை தீபத் திருநாள் அன்று தங்களது வீடுகள் தோட்டங்கள் மற்றும் கடைகளில் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க அகல் விளக்குகளை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மண் பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அகல் விளக்கு செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கார்த்திகை தீபத் திருவிழா இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணைப் பிசைந்து பதப்படுத்தி அகல் விளக்கு செய்து வருகின்றனர்.

தற்போது மழை இல்லாத காரணத்தினால் அகல் விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் மழை வந்தால் அகல் விளக்கு உற்பத்தி செய்யும் பணி பாதிப்படையும் என்பதால் அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவ திருக்கல்யாண வைபவம்!

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடியின் மௌனம் அச்சத்தை ஏற்படுத்துகிறது – மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்!