in

ஸ்ரீ ராஜ வராகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

 ஸ்ரீ ராஜ வராகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

 

சேலம் மாவட்டம் பேளூர் மெயின் ரோடு அனுப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ வராகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதை முன்னிட்டு முதலாவது ஆண்டு விழா நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் கும்ப கலசங்கள் வைத்து கலச பூஜை செய்து ஹோமம் வளர்க்கப்பட்டது ஹோமத்தில் 108 மூலிகை பொருட்கள் நறுமண திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் பட்டு வஸ்திரம் பூர்ணாஹிதி சமர்ப்பிக்கப்பட்டது.

மூலவர் ஸ்ரீ ராஜ வராஹி அம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் திருமஞ்சனம் சந்தனம் பன்னீர் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பித்து கலசத்தை பம்பை மேளதாளங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி எடுத்து வந்து மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ ராஜ வராஹி அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது.

கலந்து கொண்ட பக்தர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது பின்னர் வராஹி அம்மனுக்கு நீல பட்டு சேலை கட்டி நகை ஆபரணம் நறுமண மலர் மாலைகள் சூட்டி சிறப்பாக அலங்கரித்து தேங்காய் பழம் உடைத்து ஏக தீப ஆரத்தி காட்டி உதிரி பூக்களால் 108 அஷ்டோத்திர நாமாவளிகள் கூறி அர்ச்சனை செய்ததும் மஹா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விபூதி குங்கும பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

சேலம் சின்ன முனியப்பனுக்கு ஆனி மாத முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை

சேலம் சௌகியா வராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி 9 ஆம் நாள் விழா !