in

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் அவசரகால மீட்பு ஒத்திகை! அந்தரத்தில் சிக்கியவர்களை மீட்டுப் பயிற்சி!

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் அவசரகால மீட்பு ஒத்திகை! அந்தரத்தில் சிக்கியவர்களை மீட்டுப் பயிற்சி!

​​அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இயக்கப்பட்டு வரும் கம்பிவட ஊர்தி ()ரோப்கார் சேவையில், எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின்தடை ஏற்பட்டு பெட்டிகள் அந்தரத்தில் நின்றுவிட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த கூட்டு மாதிரி ஒத்திகை (Joint Mock Drill) இன்று பழனி மலைப்பாதையில் முழுவீச்சில் நடைபெற்றது.

​முதற்கட்டமாக, ரோப்கார் நடுவழியில் நின்றதாகச் சூழல் உருவாக்கப்பட்டு, திருக்கோயில் ரோப்கார் பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் பழனி தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினர் இணைந்து அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ரோப்கார் கம்பிவடத்தில் ஏறிப் பெட்டியை அடைந்து, பக்தர்களைக் கயிறு மூலம் கீழே இறக்குவதற்கான தொடக்கக்கட்ட பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் செய்து காட்டினர்.

​அதனைத் தொடர்ந்து, தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த (NDRF) அதிநவீனப் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் களத்தில் இறங்கினர்.
​மலை முகடுகளுக்கு நடுவே அந்தரத்தில் அந்தரத்தில் தொங்கிய கேபினை அடைந்த NDRF வீரர்கள், உள்ளே காயமடைந்த நிலையில் இருந்த பக்தருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை மீட்பு ஸ்ட்ரெச்சரில் (Rescue Stretcher) படுக்கவைத்து, பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் நவீன கயிறுகள் மூலமாகக் செங்குத்தான பாறைப் பகுதியிலிருந்து கீழே பத்திரமாகத் தரையிறக்கினர். பின்னர் கீழே தயாராக இருந்த மீட்புக் குழுவினர் அந்தப் பயணியைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைக்கும் காட்சிகளைத் தத்ரூபமாகச் செய்து காட்டினர்.

​கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்பாராத விபத்து அல்லது இடர்பாடுகளின் போது ஊழியர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து மின்னல் வேகத்தில் செயல்படவும் இந்த ஒத்திகை பெரிதும் உதவியாக அமைந்தது.

What do you think?

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா துவக்கம் முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு