திருவாடானை அருகே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் இன்று திறந்து வைத்தார்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில், 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
இதேபோல், நகரிகாத்தான் கிராமத்திலும் துணை சுகாதார நிலையம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து, இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் அவர்கள், ரிப்பன் வெட்டி இந்த இரு சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்


