மேகதாட்டு தீர்மானத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாட்டில் அணைக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது
இதனால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் எனவே கர்நாடக அரசு அணைக்கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்த்து வரும் நிலையில்
சட்டப்பேரவையில் புதிதாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது
இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு தீர்மானம் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மான நகலை எரித்த போது தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐ ஜே கே நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்

