பத்திர எழுத்தர்களின் உரிமையைப் பறிக்கும் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பத்திர எழுத்தர்களின் உரிமையைப் பறிக்கும் செயலைக் கண்டித்து சிதம்பரம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பு ஆவண, பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்.
பத்திரப்பதிவு துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் பத்திர எழுத்தவர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் பத்திரப்பதிவு மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும். இ.டெண்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


