in

ராகவேந்திரர் 50-வது வார பூஜை

ராகவேந்திரர் 50-வது வார பூஜை

 

விருத்தாசலத்தில் ராகவேந்திரர் 50-வது வார பூஜை – 500 பேருக்கு அன்னதானம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தீகா பிருந்தாவனம் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து 50 வாரமாக நடைபெற்று வரும் வார வழிபாடு நேற்று வியாழக்கிழமை இரவு பூதாம்பூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 108 போற்றிகள் பாராயணம் செய்யப்பட்டன.

இந்த பூஜை ஆடிட்டர் ராமநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு டிரஸ்ட் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் விருத்தாசலம் நகர பகுதியில் பிருந்தாவனம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வெகு விரைவில் அமைக்கப்படும் என்றும், அதற்காக வரும் 12-ம் தேதி 70-க்கும் மேற்பட்ட நபர்கள் மந்திராலயம் பிருந்தாவனம் செல்ல உள்ளதாகவும், தொடர்ந்து 15 வருடங்களாக விருத்தாசலம் பிருந்தீகா பிருந்தாவனம் டிரஸ்ட் மூலம் மந்திராலயம் சென்று வருவதாகவும் டிரஸ்ட் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த பூஜையில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பிருந்தீகா பிருந்தாவனம் டிரஸ்ட் உறுப்பினர்கள் ராமநாதன், ஒளிவீரா, சண்முக பிரபு, கலைமணி மற்றும் குத்தால சங்கு, குமரேசன், ராமமூர்த்தி, முருகேசன், முருகன், பாலச்சந்திரன், சுரேஷ்குமார், செந்தில்வேல், ராமசாமி, ஹரிஹர கிருஷ்ணன், மலையாண்டி சுந்தரம், விருத்தாம்பாள், ஆனந்த், அமிர்தவர்ஷன், சபாபதிவேல், குசலை சாமி, பாலமுருகன், கௌரிசங்கர், பூமணி, மாரியப்பன், ராஜ்குமார், சேட்டு, கோபாலகிருஷ்ணன், சரவணன், மகேந்திரன், கேசவ் குமார், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் அகற்றும் பணி