in

கும்பகோணம்: மாமன்ற கூட்டத்தில் படங்கள் மாட்டும் போட்டி  செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து செய்தி சேகரிப்பு

கும்பகோணம்: மாமன்ற கூட்டத்தில் படங்கள் மாட்டும் போட்டி  செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து செய்தி சேகரிப்பு

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு நாற்காலி ஒதுக்காததால் தரையில் அமர்ந்து செய்தி சேகரித்தனர். மேலும் கூட்ட அரங்கில் கட்சி தலைவர்கள் படங்களை மாட்டும் போட்டி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 39, அதிமுக 2, காங்கிரஸ் 2, சிபிஐ, விசிக, மதிமுக தலா 1 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். திமுக உறுப்பினர் ஒருவர் இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது.

இன்று தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்ட அரங்கில் முதலில் தமிழக முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களை மாட்டினர். இதனைப் பார்த்த அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டினர்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜர் படத்தை கூட்ட அரங்கில் மாட்டியதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் அமர இடம் இல்லாததால் தரையில் அமர்ந்து செய்தி சேகரித்தனர். இதனைப் பார்த்த திமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்கு நாற்காலி ஏற்பாடு செய்யும்படி கூறினர். உடனே மாநகராட்சி ஊழியர்கள் நாற்காலிகளை கொண்டு வந்தனர்.

What do you think?

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அச்சு இயந்திரம் தவெக பிரமுகர்

கிராமத்தில் நடந்த அதிசயம் வீட்டு மாடியில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்