in

செஞ்சி முல்லை நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு

செஞ்சி முல்லை நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு முல்லை நகரில் வசித்து வரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு இது வரையில் சாலை வசதியோ குடிநீர் வசதியோ கழிவுநீர் கால்வாய் வசதியோ இன்றி தவித்து வருவதால் அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று செஞ்சி திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட வந்தவர்களை தடுத்து செஞ்சி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் இது குறித்து செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு நேரில் வந்த செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கால்வாய் இல்லாததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் வசதியின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருவதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே தொடர்ந்து முல்லை நகர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

திருவிடைமருதூர்: பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தூக்கு கயிறுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

புதுச்சேரி அரசியலில் மக்கள் காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுகின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்