நாகையில் தமிழ் மாநில தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகையில் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் மாநில தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆண்டிற்கு இருநூறு நாட்கள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், தின ஊதியம் 700 ரூபாய் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி நகராட்சிக்கு விரிவு படுத்த வேண்டும், வேலை தளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மாநில அரசு கோயில் மனையில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நாகப்பட்டினம் திருமருகல் கீழ்வேளூர் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


