பணம் திருட்டு லாரி, ஜேசிபி உரிமையாளர்கள் போலிசில் புகார்
ஓசூர் அருகே லாரி டிரைவர்களுடன் இணைந்து பெட்ரோல் பங் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணம் திருட்டு லாரி, ஜேசிபி உரிமையாளர்கள் போலிசில் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த காந்திநகர் பகுதியில் பைவ் ஸ்டார் ஏஜென்சிஸ் என்னும் எரிபொருள் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது..
ஓசூர் பகுதி மற்றும் கர்நாடகா மாநில எல்லைகளில் உள்ள லாரி, ஜேசிபி வாகனங்கள் தினந்தோறும் இந்த பெட்ரோல் நிலையத்தில் தான் வாகனங்களுக்கு டீசல் நிரப்பி வருவதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் வாகன உரிமையாளர்கள் டிரைவர்களிடம் பணம் கொடுக்காமல், எரிபொருள் நிரப்பிய பிறகு UPI அல்லது கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி வந்ததாகவும், வாகனங்களில் நிரப்பும் டீசலுக்கும், வாகனங்கள் மைலேஜ் வரவில்லை என்பதால் லாரி உரிமையாளர் ஒருவர், டீசல் நிரப்புவதை நேரடியாக அங்கு சென்று மறைவாக பார்த்துள்ளார்..
அப்போது லாரி டிரைவர் 2500 ரூபாய்க்கு டீசல் நிரப்பிக்கொண்டதை செல்போனில் படம் பிடித்து கொண்டு கிரிடிட் கார்டு மூலம் 3000 ரூபாயை ஸ்வைப் செய்வதை மறைந்திருந்து பார்த்த பின் நேரில் சென்று இதனை கண்டுபிடித்துள்ளார்..
இதுக்குறித்து, பெட்ரோல் பங்க ஊழியரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை என்கிற நிலையில் பெட்ரோல் நிலைய உரிமையாளரும் இதனை கண்டுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது..

இந்த நிலையில், லாரி உரிமையாளர்கள், ஜேசிபி உரிமையாளர்கள் இந்த முறைகேடு குறித்து ஓசூர் அட்கோ போலிசில் புகார் அளித்துள்ளனர்..
அப்போது பேட்டியளித்த அவர்கள்:
லாரி தொழில் என்பது தினந்தோறும் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், தினந்தோறும் லாரி டிரைவர்களுடன் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இனைந்து பல நாட்களாக ஆயிரக்கணக்கில் பணம் திருட்டு முறைக்கேட்டில் ஈடுபட்டு வந்ததால் மேலும் நஷ்டத்துடன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால், போலிசார் விசாரணை நடத்தி பங்க் ஊழியர் மற்றும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


