in

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த அமைச்சர் தென்னரசு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த அமைச்சர் தென்னரசு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த மேல்மலையனூர் ஜே.வி.எம் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு கலந்து கொண்டார்.

கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் தென்னரசு, மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து கோயில் உள்பிரகாரத்தில் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும், முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துடன் ஏராளமான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு அங்காளம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தி, தங்கத் தேர் இழுத்து வேண்டுதல் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து வழிபாடு செய்தனர்.

What do you think?

பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

விவசாயிகள் நூதன போராட்டம் – திருவோடு ஏந்தி, மண் தின்று கண்டனம்