in

பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

 

செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சன விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நடராஜருக்கு 40 கிலோ விபூதி 40 கிலோ சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைக்கு பட்ட கலச புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடராஜருக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க நடராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானுக்கு அரோகரா அரோகரா என பக்தி முழுக்கம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம் ஆடி பக்தி பரவசத்துடன் தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

விழாவுக்குக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட செய்திருந்தனர்.

What do you think?

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட யோகா திருவிழா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த அமைச்சர் தென்னரசு