சந்தைப்பேட்டை புதூர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
நாமக்கல் நகர் சந்தைப்பேட்டை புதூர் அருள்மிகு ஸ்ரீவெள்ளையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரம், சந்தைபேட்டைபுதூர், அருள்மிகு ஸ்ரீ வெள்ளையம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.
பராபவ ஆண்டு ஐப்பசி மாதம் 15-ம் நாள் (01-11-2026) ஞாயிற்றுக்கிழமை நேற்று மிக விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு யாக வேள்விகள் நிறைவுற்று கடம் புறப்பாடு திருக்கோவில் சுற்றி வந்து கோவில் மேல் உள்ள விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக திருவிழாவை மிக விமர்சையாக நடத்தினர்.
பின்னர் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாதீபாரனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுவழிபாடு செய்தனர்.


