தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உணவு பொட்டலம் அன்னதானமம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் இந்திய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம் தலைமையில் மாவட்ட தலைவர் பானு சேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது பின்னர் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ராகுல் காந்தி நீண்ட ஆயுளோடும் நலமாகவும் வருங்கால இந்திய பிரதமராக சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அதனை அடுத்து அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவும் வழங்கபட்டது இந்த நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


