நடைபாதை பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நான்கு ஏக்கரில் பயனற்று கிடக்கும் திருவிடைக்கழி கோவில் குளம் தூர்வாரி நடைபாதை பூங்கா அமைக்க பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான சிவனும் முருகனும் ஒரே சன்னதியில் அமைந்துள்ள திருக்குராவடி மரம் அமைந்துள்ள சிறப்பு பெற்ற சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் அருகே சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோவில் குளம் அமைந்துள்ளது.
இந்த கோவில் குளமானது முற்றிலும் பயன்பாடு இன்றி ஆகாய தாமரைகள் படர்ந்து குப்பை கூலங்கள் நிறைந்து பயனற்று கிடக்கிறது 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவில் குளம் முறையாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இல்லாமல் பயனற்று கிடப்பதாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் குளத்தை முழுவதும் நான்கு ஏக்கர் குளத்தை தூர்வாரி குளம் சுற்றிலும் நடைபாதை அமைத்து பூங்கா அமைத்து பக்தர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் குளத்தின் நான்கு புறமும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு படித்துறை அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் முருகன் சிறப்பு விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவில் குளமானது பராமரிக்கப்பட்டு தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


