தமிழக அரசு கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக அரசு கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இருப்பு கிராமத்தில் சர்வே எண் 157/1-ல் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தில் வீடு மனை இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கட்ட இடம் இல்லாமல் தவித்து வருவதால் அரசு உடனடியாக ஆய்வு செய்து இலவச மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், நெய்வேலி தொகுதி பொருளாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர் வீரப்பன், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு கண்டன உரையில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சட்ட விழிப்புணர்வு சங்கம் பழனி ஆண்டவர், ஏழைகளின் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். .
ஏழை எளிய ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்கி வீடு கட்ட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….


