தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் 100 பேர் இணைந்து காபி துகள்களை கொண்டு 100 சதுர அடி காபி ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்தனர்
தமிழ் வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் மாற்றப் பயிற்சி அமைப்பைச் சேர்ந்த 100 பயிற்சியாளர்கள் இணைந்து, காபித் துகள்களைப் பயன்படுத்தி 100 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான காபி ஓவியத்தை உருவாக்கினர். தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டது.
100 நபர்கள் தலா 1 சதுர அடி அளவிலான 100 தனித்தனி ஓவியங்களை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து 100 சதுர அடி பரப்பளவிலான காபி ஓவியமாக அமைத்தனர்.
இந்த சாதனையை Virtue Book of World Records உலகச் சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான முனைவர் சசிரேகா சந்திரசேகரன் மற்றும் சுகந்தினி பாலாஜி ஆகியோர் சார்பாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டது.


