தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து தூக்கிலிட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம்
வறண்டு காணப்படும் முடிகொண்டான் ஆற்றின் டிரோன் காட்சிகள் ; தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து தூக்கிலிட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம்.
ஜூன் 12 ஆம் தேதியான இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் போலகம் பகுதியில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் ரெகுலேட்டரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்.

கழுத்தில் வைக்கோல் கயிறுகளை சுற்றி தூக்கிலிட்டு நூதன முறையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
காவிரி நீர் திறக்கப்பட்டால் கரைபுரண்டோடும் காவிரி வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் மிக பிரமாண்டமான முடிகொண்டான் ஆறு தண்ணீரின்று வறண்டு காணப்படும் கழுகுப்பார்வைக் காட்சிகள்.


