in

கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீட்டு,

கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீட்டு,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு கூலி வேலைக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பெண்களும் அடங்குவர். வேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்தவர்கள் அவர்களை வேலை இன்றி தவிக்கவிட்டு கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் பொரவச்சேரி பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர் அதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையினரின் ஏற்பாட்டில் அவர்களை சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னதாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன் தலைமையில் வருவாய்துறையினர் அவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கி தேவையான உதவிகளை செய்தனர்.

வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் கைவிடப்பட்ட சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

What do you think?

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

தொண்டி தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணக் கொள்ளை: தட்டிக்கேட்ட பெற்றோர்களுக்கு மிரட்டல் – என புகார்