in

நல்லாடை அக்னீஸ்வரர் கோயிலில் ஐப்பசி பரணி சிறப்பு வழிபாடு! 🙏

நல்லாடை அக்னீஸ்வரர் கோயிலில் ஐப்பசி பரணி சிறப்பு வழிபாடு! 🙏

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்வேறு சிறப்புகள் கொண்ட பரணி ஸ்தலம் சுந்தர நாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது சிறப்பு பெற்ற பரணி ஸ்தலத்தில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி அக்னீஸ்வரர் சுந்தர நாயகி சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது .

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது இதில் பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிமாவட்டம் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்ய கோவில் அறங்காவலர் அறங்காவலர் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

What do you think?

ஓசூர் அருகே காலவதியான கேக் விற்ற பேக்கரிக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்

ஓசூர் அரசு மருத்துவமனையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதார முகாம்!