in

நிலுவை தொகையை வழங்காத கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நிலுவை தொகையை வழங்காத கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைப் பொருள்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 கோடியே 25 லட்ச ரூபாய் நிலுவை தொகையை வழங்காத ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*

புதுச்சேரி திருக்கனூர் கூனிச்சம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளைப் பொருட்களை மழையில் நனையாமல் வைப்பதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய பொருளுக்கு நிலுவையில் உள்ள மூன்று கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், தமிழக வெற்றி கழகம், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து விவரங்கள் கூறும்போது…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள், உடனடியாக வசதிகள் ஏற்பட்டு தர வேண்டும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட விவசாய பொருள்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

இந்தப் போராட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அரிபுத்திரி காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் முத்துரங்கம் சுரேஷ் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருள் காங்கிரஸ் மாநில செயலாளர் ரகுபதி தா வே க நிர்வாகி பாரதிதாசன் மற்றும் காங்கிரஸ் தாவேகா கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

தொண்டி தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணக் கொள்ளை: தட்டிக்கேட்ட பெற்றோர்களுக்கு மிரட்டல் – என புகார்

தேனியில் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணைந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்