அருள்மிகு கோமூக்தீஸ்வரர் கோயிலில் திருமூலர் குருபூஜை விழா
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அருள்மிகு கோமூக்தீஸ்வரர் கோயிலில் திருமூலர் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது குருமகா சந்நிதானம் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில்
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு கோமுகதீஸ்வரர் திருக்கோயிலில் தென் மூலையில் ஸ்ரீ திருமூலதேவ நாயனார் ஞான சமாதி கொண்டு அருள்கின்றார்.

இவர் இக்கோயிலில் உள்ள படர் அரசின் கீழ் யோகியிருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல்களை இயற்றினார். இத்தகைய 3000 பாடல்கள் திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
திருமூல நாயனாரின் குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு கோயிலின் தென்மூலையில் உள்ள திருமூல நாயனாருக்கு இன்றைய தினம் திருமூலரின் குருபூஜையை ஒட்டி மூலவர் திருமூலருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அனைத்து தொடர்ந்து மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது பின்னர் கோ பூஜை நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பருமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசிரியரை வழங்கினார் இந்நிகழ்வில் தமிழகம் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருமூல நயனாரை தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருமூலர் குருபூஜை ஒட்டி முன்னதாக கடந்த மூன்று நாட்கள் திருமூலர் சிறப்புகளை எடுத்துரைக்கும் திருமந்திர மாநாடு நடைபெற்றது.
அதிலும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


