in

நாகப்பட்டினத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு “சிங்கப்பெண்” ரோந்து பணி:

நாகப்பட்டினத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு “சிங்கப்பெண்” ரோந்து பணி:

தமிழகத்தில் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ,நாகூர், வேளாங்கண்ணிஉள்ளிட்ட பகுதிகளில் “சிங்கப்பெண்” என்ற பெயரிலான பெண் காவலர்களின் சிங்கப்பெண் ரோந்து படையினர், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள், கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது ஈவ்-டீசிங் (Eve-teasing) போன்ற தொல்லைகளோ ஏற்பட்டால், உடனடியாக இந்த சிங்கப்பெண் போலீசாரை அணுக வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் இதற்காக பிரத்யேக சைரன் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களுக்கு இந்த சிங்கப்பெண் ரோந்து பணி பெரும் மன தைரியத்தையும், பாதுகாப்பையும் தரும் வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த “சிங்கப்பெண்” ரோந்து பணி, நாகப்பட்டினத்தில் பெண் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

What do you think?

நாமக்கல் காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு- வழிபாடு செய்த பக்தர்கள்

வேளாங்கண்ணி மாதா குளம் ரோடு டாஸ்மாக் கடை மூடல் – 6 ஆண்டு பொதுமக்கள் போராட்டத்திற்கு வெற்றி